தம்பி!
ரிசல்ட் வந்துவிட்டது, பேச்சைக் காணோமே என்கிறீர்கள். புரிகிறது.
அது என்ன தம்பி வாயாரோம் நமட்டுச் சிரிப்போடு, கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் கதவருகில் நின்றுகொண்டிருக்கிறாய்.
ஹான். தெரிகிறது தெரிகிறது. UGC NET ரிசல்ட் பற்றி சொல்லுங்கள் அண்ணா என்று நீங்கள் விளிப்பது என் காதில் விழுகிறது தம்பி.
ஊரெல்லாம் மாதக் கணக்கில் படித்துக் கொண்டிருந்த போது, நம் அண்ணன் வெறும் ஒன்றரை நாள் தானே படித்தான். என்னத்தை எழுதிவிடப் போகிறான் என்ற குறுகுறுப்பா? ஆம் தம்பி நீ சொல்வது உண்மைதான்.
இந்த ஒன்றரை நாளுக்குள் உங்கள் அண்ணன் NET பாஸ் செய்துவிட்டான் என்பதை உங்களை வாரியணைத்து சொல்லத்தானே காத்திருந்தேன். ஆம். அத்தோடு ஒரு சோகச் செய்தியையும் சொல்லத்தானே வேண்டும். O.5 percentile -ல் JRF வாய்ப்பை இழந்துவிட்டு நிற்கிறேன் என்பதை எப்படி சொல்வேன்.
ஒன்றரை நாள் படித்ததற்கு நெட் பாஸ் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவதா, 0.5%-ல் JRF இழந்ததை நினைத்து வருத்தப்படுவதா? ஊர்க் கண்ணீரோடு சேர்ந்து என் கண்ணீரையும் துடைக்க வேண்டுமே தம்பி!
இந்த அண்ணனுக்கு உன்னை விட்டால் வேறு யாரடா உண்டு. மகிழ்ச்சி என்றாலும், துக்கம் என்றாலும் உன் தோள்களைத்தானே தேடி வருகிறேன். வா. என்னைத் தாங்கிக் கொள்.
உழைக்காமல் உயர்வில்லையடா தம்பி. நம் ஒன்றரை நாள் உழைப்பிற்கே நெட் கிடைத்துவிட்டால், முழுமூச்சில் இறங்குடா கோட்டையைப் பிடித்துவிடலாம்!
(அண்ணாதுரை நடையில் ஒரு தேற்றக் கடிதம்)