புதிய கல்விக் கொள்கைப்படி நான்காண்டு படிக்க வேண்டுமாம். ஏற்கனவே கல்வி சார்ந்த படிப்புக்கு போதிய ஊதியமும் மதிப்பும் இருப்பதில்லை. மூன்றாண்டு இளங்கலை இலக்கியம் படித்து, மேற்கொண்டு இரண்டாண்டு முதுகலைப் படித்து, தேசிய தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று, நண்பர்கள் எல்லாம் வாழ்வில் செட்டில் ஆகும் தருவாயில் நாங்கள் மீண்டும் ஐந்தாண்டு ஆய்வியல் பணிக்குத் திரும்பினால் 28,29 வயதாகிவிடும். இதற்குப் பின் பணிக்குச் சேர்ந்தால் உதவிப் பேராசிரியரராக எமக்குக் கிட்டும் ஊதியம் ரத்தக் கண்ணீர் வரவழைக்கும். கல்லூரி கல்வியியல் இந்நிலை என்றால் பள்ளிக்கல்லூரி சிறிதளவு ஆசுவாசம் அளித்தது. ஆனால் இனி இதன் கதியும் அதோகதிதான்.
இளங்கலை முதுகலைக்கு ஐந்தாண்டு செலவு செய்து இரண்டாண்டு பி.எட் முடித்து எளிமையான, கவுரவமான ஆசிரிய வேலையை நம்பி வரும் வருடாந்திர கிராமப்புற மாணவர்களை இனி எந்தக் கண் கொண்டு பார்ப்பது? மேற்படிப்புக்கு மட்டுமே 9 ஆண்டு செலவு செய்யும் அளவு குடும்பப் பொருளாதாரம் உள்ளவர்கள் ஏன் இந்த ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? இல்லை, ஒன்பதாண்டும் உட்கார்ந்து படித்த பின்னர் வசதியான வாழ்க்கையைத்தான் இந்தப் படிப்பு தூக்கித் தருகிறதா?
போதுமடா போதும்..