சிமோன் பொலிவாருக்கு 19 வயதில் திருமணம் ஆனது. இரண்டாண்டு காதலை பெண் வீட்டார் ஒப்புக்கொண்டாலும் வயதைக் காரணம் காட்டி தள்ளிப்போட்டார்கள். விடாது முயன்று ஸ்பெயினுக்குப் போய் மரிய தெரேசாவை பொலிவார் திருமணம் செய்துகொண்டு வெனிசூலா கூட்டி வந்தார்.
ஆனால் திருமணம் ஆன அடுத்த ஆண்டே (1803), தென் அமெரிக்காவின் தட்ப வெப்பம் ஒத்துவராததாலும் மஞ்சள் காமாலையாலும் நோய் பீடித்த மரிய தெரேசா இறந்துபோனார். அவர் வயிற்றில் வளர்ந்த பொலிவாரின் வாரிசும் மடிந்தது.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த பொலிவாருக்கு, ஒரே நாளில் மனைவியும் குழந்தையும் இறந்துபோனது நீங்காத வடுவாய் மனத்தில் பதிந்தது.
“இனி நான் மறுமணம் செய்துக்கொள்ளப் போவதில்லை. மரியா இருந்த இடத்தில் யாரையும் என்னால் யோசிக்க முடியாது” என்று தன் 20 வயதில் முடிவெடுத்த பொலிவார், இறுதி மூச்சுவரை உறுதிக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தார்.
அதே பொலிவார், லிபரேட்டர் என்று பட்டம் பெற்று, பெரும் புரட்சியாளர் ஆகி தென் அமெரிக்க வரலாற்றில் நீங்கா இடம் பிடித்ததெல்லாம் பின்னர் நடந்த கதை.
தன் இறுதிக்காலத்தில் நண்பன் ஒருவரிடம் மரியா பற்றி பொலிவார் சொன்ன குறிப்பு அந்தக் காதலின்மேல் புனிதப் பிம்பம் சேர்க்கிறது.
“If I had not lost her, I would not have been General Bolívar or the Liberator.”
(Pic.) Simón Bolívar & María teresa wedding.