Books
அக்கியானேவின் மாயக் கரங்கள்
‘அக்கியானேவின் மாயக் கரங்கள்’, இந்து தமிழ் திசை இணைப்பிதழான மாயாபஜாரில், ‘குழந்தை மேதைகள்’ என்கிற தலைப்பில் தொடராக வெளிவந்தது. இளம் வாசகர்களுக்கு அவர்கள் வயதிலேயே இருக்கும் மேதைகளை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். 7 வயதுக்குள் 25 ஆயிரம் ஓவியங்களைத் தீட்டிய கேரளாவின் தாமஸ் க்ளிண்ட், 9 வயதில் மன்னரான துட்டன்காமன், டிவியைக் கண்டறிந்த பைலோ ஃபான்ஸ்வொர்த், நோயிலிருந்து மீண்டெழுந்த 7 வயது வயலின் மேதை சீசர் சாண்ட், 13 வயதில் எவரெஸ்ட் சிகத்தைத் தொட்ட ஜோர்டன், உலகத்தை மெளனமாக்கிய 12 வயது செவன் சுசூகி, கணித மேதை ஆர்ஃபா கரீம் போன்று 22 குழந்தை மேதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்
ஒரு கட்டுரை உங்களைத் திகைக்க வைக்கும் என்றால் இன்னொன்று அதிர வைக்கும். சில பக்கங்களை நகைத்துக் கொண்டும் வேறு சிலவற்றை ஆழ்ந்து யோசித்துக் கொண்டும் படிக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில், அறிவுத் தேடல் கொண்ட அனைவரையும் செழுமைப் படுத்தும் நூல் இது. ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா உல்ஃப், மார்க் ட்வைன், மால்கம் எக்ஸ், ஐன்ஸ்டைன், பிரான்சிஸ் பேக்கன், ஆல்பர்ட் காம்யூ, மாக்சிம் கார்க்கி உள்ளிட்டவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் இதில் அடங்கியுள்ளன. அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் உலக அரசியலிலும் வித்தகராக இருந்திருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்குத் தூக்கிவாரிப் போடும் ஒரு யோசனையை முன்வைக்கிறார் ஜோனத்தன் ஸ்விஃப்ட். காதல் ஏன் தனக்குப் பிடிக்காது என்பதை விவரிக்கிறார் தத்துவ அறிஞர் பிரான்சிஸ் பேக்கன். வறுத்த பன்றி குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்கிறார் சார்ல்ஸ் லேம்ப். பெண் கல்வி, பழங்குடியினர் உரிமை, அறிவியல், அரசியல், புத்தக வாசிப்பு, தத்துவம், உணவு எனப் பல்சுவை எழுத்துகளைச் சுவையான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா. குறிப்பாக மாணவர்கள் இதிலிருந்து நிறைய பயன்பெறமுடியும்.
காலத்தின் குரல்
உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது. ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய கோணங்களில் சிந்திக்கவும் புதிய உத்வேகத்தோடு போராடவும் நம்மை உந்தித் தள்ளும். சாதி, நிறம், பாலினம், வர்க்கம் என்று பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் இதிலுள்ள ஒவ்வொரு குரலுக்கும் உண்டு. இது காலத்தின் குரல் மட்டுமல்ல. காலத்தைக் கடந்து உயிர்ப்போடு திரண்டு நிற்கும் மனிதத்தின் குரலும்கூட. இஸ்க்ராவின் அழகிய, உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்பில் மலரும் இந்நூல் படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்றது.
வரலாறு வளர்த்த வாய்கள்
“மடிந்து போன மக்களின் பிணவாடை உங்கள் நாசிகளைத் துளைக்கவில்லையா?” எனக் கிரேட்டா கேட்கையில் பருவநிலை மாற்றத்தின் பயங்கரம் உறைக்கும். ‘ஆங்கிலேய காலனியாதிக்கக் கொடுங்கோன்மைக்கு’ எதிராக ஒலிக்கும் சசி தரூரின் அறச்சீற்றம் தமிழில் தகிக்கிறது. சிங்காரவேலரின் உரை அவரின் வாழ்வும், பணியும் குறித்த ஆவலைப்பெருக்கும். சூசனின் வாக்குரிமைக்கான முழக்கம் ‘இந்திய வாக்குரிமை வேங்கைகள்’ (Indian Suffragettes) குறித்த கிளர்ச்சி தரும். மலாலாவின் நகைச்சுவையும், பேரன்பும், கல்விக்கனலும் ததும்பும் உரை நெக்குருக வைக்கும். மார்ட்டின் லூதர் கிங்கின் ‘எனக்கொரு கனவு இருக்கிறது’ உரையின் வீச்சில் ‘தாழ்ந்த மலைச்சரிவுகள் மேலெழும்புகின்றன, மூர்க்கமான நிலங்கள் சமவெளி ஆகின்றன. நாம் இந்த வாய்ப்பந்தல் மழையில் நனைந்து, நிறைந்து போகிறோம். தவறவிடக்கூடாத, தவிர்க்க முடியாத படைப்பாளியாகப் பரிணமித்து இருக்கும் இஸ்க்ராவுக்கு வாழ்த்துகள். – பூ.கொ. சரவணன்
14C
“As Les Brown remarked, ‘You are never too young to teach and never too old to learn’, so is efficiently proved by a young budding writer Satheesh Kumar. This talented leader has made an endeavour to do something out of the box, at such young age that is while pursuing his graduation. Rather than merely gaining knowledge, he has tried to spread his acquired knowledge for the benefit of others.” Farookh Sensei Director, Farookh Sensei Learning Edge International (P) Ltd.