பிரான்சிஸ் ஸ்காட் கீ பிட்ஸ்ஜெரால்ட் உலகறிந்த அமெரிக்க எழுத்தாளர். The Great Gatsby, The Curious Case of Benjamin Button, Tender is the Night போன்ற புகழ்பெற்ற எழுத்தாக்களை படைத்தவர். அவரின் எழுத்து ஒழுக்கம் ஆச்சரியமாக இருக்கிறது.
பிட்ஸ்ஜெரால்ட் எந்தவொரு அட்டவணைப் பின்னும் சுற்ற விரும்பாதவர். ‘சீரிய, ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, கட்டுப்பாடான’ போன்ற சொற்களைச் சொன்னாலே கல்லெறிவார். பெரும்பாலும் 11.00 மணிக்குத்தான் தூக்கத்திலிருந்து விழிப்பாராம். அன்றாடம் கடமைகளை முடித்துவிட்டு மாலை 5.00 மணிக்கு எழுதத் தொடங்குவார். அதிகாலை 3.30 வரை உட்கார்ந்த இடத்திலேயே சளைக்காமல் எழுதும் வழக்கத்தை தொடர்ச்சியாகப் பின்பற்றியிருக்கிறார். ஒரே அமர்வில் 7000, 8000 வார்த்தைகள் வரை மிகச் சாதாரணமாகக் உதிர்த்துக் கொட்டும் வன்மையாளர்.
ஆல்கஹால் உள்ளே சென்றால், படைப்பூக்கம் மிகுந்த நாவல்கள் எழுதலாம் என்று தொடக்கத்தில் நம்பினார். ஜின் அடித்து கிக் ஏறும்வரை காத்திருந்து எழுதிய கூத்தும் உண்டு. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வஸ்துவால் ஒரு பயனும் இல்லை என்றறிந்து தூர வீசிவிட்டார்.