•விடைபெறுகிறேன்•
கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ‘துட்டன்காமன்’ பற்றிய முதல் அத்தியாயத்தோடு தொடங்கப்பட்ட ‘குழந்தை மேதைகள்’ தொடர் ‘சககோவியா’ என்ற பழங்குடியினச் சிறுமியோடு இன்று நிறைவடைகிறது.
இந்த 4 மாதங்களில் மிகக் குறுகிய 20 கட்டுரைகளின் மூலம் 20 குழந்தை மேதைகளை, அதிகப்படியாக யாரும் கேள்விப்படாத பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
கிழக்கு டுடேவில் முதுகலை மாணவனாக மொழிபெயர்த்துக் கொண்டிருந்த என் எழுத்தை நம்பி ‘தொடர்’ வாய்ப்பளித்த Sujatha SV அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. திரைக்குப் பின் உதவி செய்த Marudhan Gangadharan சாருக்கும் என் நன்றி பகிர்ந்து கொள்கிறேன்.
இஸ்க்ரா என்ற பெயரை அழுத்தந் திருத்தமாக பதிவு செய்ய உதவிய ‘குழந்தை மேதைகள்’ தொடரை என்றும் மறவேன்!
இனி இந்தப் பகுதியில் Nanmaran Thirunavukkarasu அண்ணா எழுதும் ‘விடை தேடும் அறிவியல்’ என்று புத்தம் புது தொடர் ஆரம்பமாக இருக்கிறது. அண்ணனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
மீண்டும் ஒரு புதிய தொடருடன் விரைவில் சந்திக்கிறேன் ❤️